India
BREAK UP செய்ததால் ஆத்திரம்: முன்னாள் காதலியை பழிவாங்க காதலன் செய்த கொடூர செயல்.. அதிர்ச்சியில் பெங்களூரு
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடன ஆசிரியராக ஆண்டி ஜார்ஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் கல்லூரி மாணவி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாகி காதலிக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை புகைப்படமாக ஆண்டி ஜார்ஜ் எடுத்து வைத்துள்ளார். இதனிடையே அந்த கல்லூரி மாணவி, கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டி ஜார்ஜுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆண்டி ஜார்ஜ் கடும் கோவத்தில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியை பழிவாங்க எண்ணி தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்த அந்த மாணவி அந்த புகைப்படங்களை அழித்து விடுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து தனது நண்பர்களான சந்தோஷ் மற்றும் சசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த புகைபடத்தை காட்டி, மூவரும் அந்த பெண்ணை கடந்த ஆறு மாதமாக தொடர்ந்த பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த கொடுமை தாங்க முடியாத அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், ஆண்டி ஜார்ஜ் மற்றும் அவரின் நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சசி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!