India
இளைஞர் கையில் துண்டாக வெட்டப்பட்ட 'தலை'.. கதறியடித்து ஓடிய மக்கள்: உ.பியில் நடந்த பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிபா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு ஆசிபா வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து காதலர்கள் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் இது குறித்து ஆசிபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிபாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் தொடர்பாக ஆசிபாவிற்கும் அவரது சகோதரர் ரியாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரது தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையைக் கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இவர் சாலையில் தலையுடன் நடந்து சென்றதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தி.மு.க ஆட்சியில் 1.94 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!