India
பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை.. நண்பர்களோடு சேர்ந்து காதலன் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் என்ற பகுதியைச் சேர்ந்த சுமேஷ் ( வயது 19) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பள்ளி சிறுமி ஒருவரும் காதலித்து வைத்துள்ளனர். சுமேஷ் சில நாட்களுக்கு முன்னர் தனது காதலியான அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துள்ளார்.
அந்த சிறுமியும் காதலன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக காதலன் அழைத்த அந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சுமேஷ் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமேஷ் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு நிற்காமல் தனது நண்பர்களான சக்தி (18), அனூப் (22), அபிஜித் (20) மற்றும் அரவிந்த் (28) ஆகியோரை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அனைவரும் அங்கு வந்ததும், அவர்கள் அந்த சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து யாரிடமும் கூறவேண்டாம் என அந்த சிறுமியை மிரட்டி அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுமியும் யாடிடமும் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு கவுன்சலிங் நடத்தியபோது, அவர்களிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த சிறுமி கூற இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிக்கு ஆறுதல் கூறி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் காதலன் சுமேஷ் உள்ளிட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!