India

“இனிமே எங்க உணவுல ‘No தக்காளி’.. காரணம் இதுதான்..” - வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த McDonald's !

தற்போதுள்ள காலத்தில் அனைத்து மக்களும் துரித உணவுகளுக்கு பழக்கமாகியுள்ளனர். குறிப்பாக மேற்கத்திய உணவுகளான பீட்சா பர்கர் உள்ளிட்ட உணவுகளை பலரும் விரும்பி உண்டு வருகின்றனர். இதற்காக என்று பிரத்யேகமாக KFC, டாமினோஸ், மெக் டொனால்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுக்க இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான McDonald's நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் பீட்சா, பர்கர், சிக்கன், கோக், பிரெஞ்சு பிரைஸ் உள்ளிட்ட பல வகை துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கும் உள்ளனர்.

இந்த நிலையில் McDonald's தங்கள் உணவுகளில் சிறிது காலம் தக்காளி பயன்படுத்தப்போவதில்லை என அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் McDonald's-ன் கிளை ஒன்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், “வாடிக்கையாளர்களுக்கு தரமான ருசியான உணவு பொருட்களை பயன்படுத்தி உணவு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் விலை உயர்வு காரணமாக குறிப்பிட்ட சில காலத்திற்கு உணவு வகைகளில் தக்காளி பயன்படுத்தப்போவதில்லை. தரமான தக்காளியை பெறும் தங்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டு வருகிறது. உத்தரகாண்டில் 1 கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் தமிழ்நாட்டிலும் வெளிச்சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையாகிறது. எனவே தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் கடைகள், பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read: உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்.. ஆஸி.யில் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன?