India
சாலையோரம் கிடந்த சடலம்.. போலிஸ் விசாரணையில் சிக்கிய மனைவி, கடன் காரன்.. பெங்களுருவில் நடந்த பகீர் !
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சன்னப்பட்டினம் என்ற கிராமம். இங்கு அருண்குமார் - ரஞ்சிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணமானது. இதையடுத்து இந்த தம்பதி தொழில் தொடர்பாக சன்னசந்திரா என்ற இடத்தில் வசித்து வந்துள்ளனர்.
ஹோட்டல் தொழில் செய்து வரும் அருண் குமார், தனது தொழில் நிமித்தமாக கணேஷ் என்பவரிடம் வட்டிக்கு ரூ.8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும் அவரால் தனது ஹோட்டலை லாபத்துடன் நடத்த இயலவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் அவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது ஹோட்டலை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் தான் கொடுத்த கடனை கணேஷும் திரும்ப கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். நேரடியாக வீட்டுக்கு வந்து கேட்டு வந்தபோது, கணேஷுக்கும் ரஞ்சிதாவுக்கும் திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் ஒருநாள் அருண் குமாருக்கு தெரியவரவே, தனது மனைவி மற்றும் கடன் கொடுத்த கணேஷை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவர்கள் தங்கள் காதலை விடவில்லை. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரஞ்சிதாவும், கணேஷும் அருண்குமாரை கொலை செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி கணேஷ் தனது நண்பர்கள் உதவியை நாடியுள்ளார். பின்னர் கடந்த ஜூன் 29-ம் தேதி ஹோட்டல் விவகாரம் குறித்து பேச வேண்டுமென்று அருணை தனியாக சந்திக்க வர சொல்லியுள்ளார்.
அருணும் அதனை நம்பி கட்டிகெரேபாளையம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கே இருந்த கணேஷ், அருணை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து சடலத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது அது அருண் என்று தெரியவந்ததால் அவரது மனைவி ரஞ்சிதாவிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. விடாமல் அவரிடம் விசாரித்ததில் அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ரஞ்சிதா, அவரது காதலன் கணேஷ், அவரது நண்பர்களான சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!