India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 40 வயது பெண்.. வீடியோவை கணவருக்கு அனுப்பிய கொடூரம் ! ம.பி-யில் அதிர்ச்சி !
மத்தியப் பிரதேசம் மாநிலம் போப்பாலின் அசோகா கார்டன் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் துணிக்கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணின் துணிக்கடைக்கு வந்த விஜய் பால் என்பவர் அடிக்கடி வருகை தந்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் பேசிவந்த நிலையில், அருகில் இருக்கும் ஒரு நிலத்தை வாங்க விருப்புவதாகவும், அந்த இடத்தை பார்க்க தன்னுடன் வருமாறும் விஜய் பால் அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அதன்படி அந்த பெண்ணும் அவரோடும் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய வீட்டுக்கு சென்று முக்கியமான ஆவணத்தை எடுத்துச்செல்லலாம் என்று கூறி விஜய் பால் அந்த பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு வைத்து அந்த பெண்ணை விஜய் பால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதை வீடியோவாகவும் எடுத்துவைத்துக்கொண்டுள்ளார். அதன்பின்னர் இதனை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி அந்த பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனிடையே சமிபத்தில் விஜய் பாலுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே எதோ தகராறு எழுந்த நிலையில், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை அந்த பெண்ணும் கணவருக்கு விஜய் பால் அனுப்பியுள்ளார். இதனைக் கண்ட கணவர் மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் கணவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலிஸார் விஜய் பாலை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?