India

நாய்க்கறி : உணவு உரிமையில் அரசு தலையிடுவது ஏற்புடையது அல்ல -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இங்கு பல்வேறு வகையான உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகள், மொழிகள் போன்றவை உள்ளன. ஆனால், இந்தியாவை சனாதன வழிமுறையில் கீழ் ஒன்றை கலாச்சாரமாக மாற்ற பாஜக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியாவை ஒற்றை மயமாக மாற்றும் முயற்சிகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நாய்க்கறி சாப்பிடுவது சகஜமானதாகும், மேலும், அங்குள்ள மக்களின் முக்கிய உணவாகவும் நாய் காரி இருக்கிறது. இப்போது நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு நாய்க்கறி விற்பனை செய்யக்கூடாது, உணவகங்களில் நாய்க்கறி பரிமாறக்கூடாது என தடைவிதிக்கக்கூடாது.

இது அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அதோடு மாநில அரசின் இந்த உத்தரவு நாகாலாந்து மக்களின் உணவு உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உணவு உரிமையில் மாநில அரசு குறுக்கிடுவது ஏற்புடையதல்ல என்றுகூறி மாநில அரசின் உத்தரவை ரத்துசெய்தார். இது தொடர்பான அவரின் தீர்ப்பில், நாகலாந்து மக்கள் நாய்க் கறி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். அவர்களின் உணவு உரிமையில் மாநில அரசு குறுக்கிடுவது ஏற்புடையதல்ல. எனவே நாய்க்கறிக்கு மாநிலஅரசு விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பை அங்குள்ள மக்கள் வரவேற்றுள்ளனர்.

Also Read: திருமணம் முடிந்த அடுத்த நாளே கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய மனைவி- வெளிவந்த அதிர்ச்சி காரணம்!