India

'மனுஸ்மிருதியை படிக்கவும்': 17 வயது சிறுமி கருக்கலைப்பு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அதிர்ச்சி கருத்து!

குஜராத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் பிரசவம் நடக்கலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கருவைக் கலைக்கக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி சமீர் தவே அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "17 வயதில் குழந்தை பிறப்பது இயல்பான ஒன்றுதான். அப்போது எல்லாம் 14, 15 வயதிலேயே பெண்கள் குழந்தை பெற்றுவிடுவார்கள். இதுபற்றி உங்கள் வீட்டில் இருக்கும் பாட்டியிடம் கேட்டு பாருங்கள். ஒருமறை மனுஸ்மிருதியை படியுங்கள். இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் 17 வயது சிறுமியின் வழக்கில் மனுஸ்மிருதியை குறிப்பிட்ட நீதிபதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: சோகத்தில் முடிந்த 3 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணி!