India
பாலியல் வன்கொடுமை வழக்கு.. பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என ஜாதகம் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி !
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பழகி வந்துள்ளனர். அப்போது அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், அதனால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைத்த அந்த பெண் இது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்படி இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தபோது அந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், அதனால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அந்த நபரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண்ணின் வழக்கறினர் மறுத்ததோடு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, இரு தரப்பினரும் தங்களின் ஜாதகத்தை 10 நாள்களுக்குள் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும், அவர்கள் அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இல்லையா என்பதை சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டது. அதோடு இதற்கு மூன்று வார கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!