India
சூட்கேஸில் தலை இல்லாமல் இருந்த பெண்ணின் சடலம்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி.. மும்பையில் பயங்கரம் !
மும்பை மீராபயந்தர் பகுதியில் உத்தன் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு ஒரு சூட்கேஸ் இருந்ததை அங்கு நடைபயிற்சிக்காக வந்தவர்கள் பார்த்துள்ளனர். நெடுநேரம் ஆகியும் அந்த சூட்கேசை எடுக்க ஆளே வராத காரணத்தல் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த போலிஸார் அந்த இடத்துக்கு வந்து அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதன் உள்ளே தலை இல்லாத நிலையில் ஒரு பெண் ஒருவரின் சடலம் ஒன்று இருந்துள்ளது.
அந்த பெனின் கையில் திரிசூலம், ஓம் போன்றவை டாட்டூவாக வரையப்பட்டிருந்த நிலையில் அவரின் கையில் ஒரு கயிறும், காலும் கட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த பெண் சிகப்பு நிற உடை அணிந்திருந்தார். இதன் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை சூடுபிடித்தது.
அந்த விசாரணையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் அஞ்சலி சிங் என்பதும், அவர் மும்பையில் நைகாவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அவரின் கணவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் தனது சகோதரருடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், பெண்ணின் கணவர் மித்து சிங், மித்து சிங்கின் சகோதரர் செளகான் சிங் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கொலைசெய்ததும், பின்னர் மூன்று துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வைத்து அடைத்து கடலில் போட்டதும் தெரியவந்தது. தொடர்த்து அவ்ர்களாய் போலிஸார் கைது செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!