India
ஆன்லைன் மூலம் அறிமுகம்.. வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. குஜராத் வரவழைத்து நடந்த கொடுமை !
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் மின்க் (வயது 19). இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் அகமதாபாத்தை சேர்ந்த மெஹேரியா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. முதலில் நட்பாக பழகிவந்த இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து அந்தப் பெண் தனது காதலரை சந்திக்க தனது பெற்றோரிடம் ரஷ்யா செல்வதாக கூறி இந்தியா வந்து மெஹேரியாயை சந்தித்துள்ளார். இங்கு அகமதாபாத்தில் இருவரும் ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். ஆனால் சில நாட்களில் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மெஹேரியா அந்த பெலாரஸ் பெண்ணை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அங்கிருந்த அந்தப் பெண் வெளியேற முயன்ற நிலையில், அவரை வெளியேற விடாமல் அவரின் போனை உடைத்துள்ளார். மேலும் அவரிடமிருந்த 2 ஆயிரம் அமெரிக்க டாலரையும் பறித்துக்கொண்டுள்ளார். அதோடு அவரின் பாஸ்போர்ட்டையும் எடுத்துவைத்துக்கொண்டார்.
ஆனால், அந்த பெண் தன்னிடமிருந்த லேப்டாப் மூலம் இங்கு இருந்த ரஷ்ய நண்பர்களுக்கு தன்னுடைய நிலை குறித்து தெரியப்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தையும் கூறியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க விரைந்து அந்த இடத்துக்கு வந்த போலிஸார் அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
ஆனால், அந்த பெண் மெஹேரியா மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த பெண்ணை பெலாரஸ் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!