India
பல ஆண்டுகளாக தொடரும் பள்ளி நட்பு.. இறந்த நண்பனை எரித்த அதே தீயில் விழுந்து உயிரை மாய்த்து கொண்ட நண்பர் !
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியை அடுத்து நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதி உள்ளது. இங்கு அசோக் என்ற 42 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் காதியா பஞ்சவடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (40) என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நட்புறவு இருந்துள்ளது. இவர்கள் நட்பு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்துள்ளது.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில், ஒருவருக்கு ஒரு பிரச்னை என்றால், மற்றவர் வந்து உடனே நிற்பார். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்கிற்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அசோக்கின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று அசோக் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் இவரது மறைவுக்கு அசோக்கின் நெருங்கிய நண்பர் ஆனந்த் வந்திருந்தார். இறுதி சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்து அசோக்கின் உடல் யமுனை ஆற்றங்கரையில் எரிக்க கொண்டு செல்லப்பட்டது.
இறுதியாக அசோக்கின் உடலுக்கு தீ வைத்து விட்டு, அங்கிருந்தவர்கள் செல்ல தொடங்கவே, தனியாக நின்று வருத்தப்பட்டு கொண்டிருந்த நண்பர் ஆனந்த், எரிந்து கொண்டிருந்த அதே தீயில் குதித்துள்ளார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு, சென்றவர்கள் திரும்பி வந்து ஆனந்தை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே ஆனந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை விரைந்து கொண்டு செல்ல முயன்றபோது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் அவரை எரித்த அதே தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!