India
12 பேரின் உயிரை காப்பாற்றிய 10ம் வகுப்பு மாணவன்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
கேரள மாநிலம் கரவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பனீஷ்குமார். இவரது மனைவி ரஜினி. இந்த தம்பதிக்கு சாரங்க் என்ற மகன் இருந்தார். இவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி சாரங்க் தனது தாயாருடன் ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் மாணவன் சாரங்க் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் மாணவன் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளைப் பெற்றோர் தானமாகக் கொடுக்க முன்வந்தனர். பின்னர் மாணவனின் கல்லீரல், 2 கிட்னி, இதய வால்வு, கண்கள் என 12 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 12 நபர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெளியான 10ம் வகுப்புத் தேர்வில் மாணவன் சாரங்க் ஏ பிளஸ் கிரேடு எடுத்து சேர்ச்சி பெற்றுள்ளது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர் உடலுக்கு கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
”மகன் இறந்த சோகத்திலும் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி எல்லோருக்கு முன்னுதாரணமாகப் பெற்றோர்கள் அமைந்துள்ளனர்” என கண்ணீர் மல்க அமைச்சர் சிவன் குட்டி பேட்டியளித்துள்ளார்.
மகன் இறந்த பெரும் சோகத்திலும் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பத்து பேருக்கு வாழ்வளித்த பெற்றோர்களின் மனித நேயம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தானத்தில் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம் என்பதற்கு ஏற்றார் போல் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்று பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!