India
62 வயது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய 32 வயது உ.பி இளைஞர்.. பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் !
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் தாஜ்மகாலை பார்ப்பதற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு சென்றுள்ளார்.
ஆக்ராவுக்கு சென்றவர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் 32 வயதாக ககன்தீப் என்பவரும் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறியுள்ளனர். இருவரும் ஆக்ராவின் பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ககன்தீப் அந்த அமெரிக்க பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த பெண் அமெரிக்கா சென்றாலும் பலமுறை தனது காதலனை சந்திக்க இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
அதோடு விரைவில் திருமணம் செய்வதாக கூறி ககன்தீப் பலமுறை அந்த அமெரிக்க பெண்ணிடம் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளார். இந்த பெண்ணுடனான பழக்கம் ககன்தீப்பின் உறவினர்களுக்கும் தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒருகட்டத்தில் ககன்தீப் திருமணம் செய்வதாக தொடர்ந்து ஏமாற்றி வந்ததை அந்த பெண் உணர்ந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த மே 4ஆம் தேதி டெல்லி காவல்துறையில் அந்த பெண் ககன்தீப் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த டெல்லி போலிஸார் ஆக்ராவில் இருந்த ககன்தீப்பை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். அமெரிக்க பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!