India
மேற்கு வங்கம்: 10- ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. 4 சிறுவர்கள் கைது !
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகுஞ்ச் பகுதியில் உள்ள கங்குவாயை சேர்ந்த 10-ம் வகுப்பு சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கம் போல டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திருப்ப வராததால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் இரவு முழுவதும் சிறுமியை தேடி அலைந்துள்ளனர்.
அடுத்த நாள் சிறுமியின் சடலம் அங்கிருந்த கால்வாய் ஒன்றில் அரைகுறை ஆடைகளுடன் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமியின் உடலை போலிஸார் ஒப்படைக்கோரிய நிலையில் அதற்கு சிறுமியின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் தடயங்களை திரட்ட பிரதே பரிசோதனை அறிக்கை மிக முக்கியம் என்பதால் போலிஸார் வலுக்கட்டமாக சிறுமியின் சடலத்தை மீட்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டனர்.
எனினும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு சிறுவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய ஆதாரங்கள் இழக்கப்படாமல் இருக்க, பிரேத பரிசோதனையை நிஷாத பாதிக்கப்பட்டவரின் உடலை அவர்களிடம் இருந்து மீட்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என அந்த பகுதி காவல் கண்காணிப்பார் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?