India
தொடரும் தொல்லை.. தெரு நாய்கள் கடிதத்தில் 18 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கதறி துடித்த பெற்றோர் !
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அமைந்துள்ளது மேட்டவலசா என்ற கிராமம். இங்கு தம்பதி ஒருவருக்கு 18 மாத பெண் சாத்விகா குழந்தை இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றைய முன்தினம்) இரவு நேரத்தில் பெற்றோர் உள்ளே இருக்க, குழந்தை சாத்விகா வீட்டின் வெளியே வந்துள்ளார். இதனை வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. வெளியே வந்த சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த 5 தெரு நாய்கள் குழந்தையை சூழ்ந்து குரைத்துள்ளது. இதில் குழந்தை அழ தொடங்கவே அந்த நாய்கள் ஒன்று சேர்ந்து குழந்தையை கடித்து இழுத்து குதறியுள்ளது. இதில் குழந்தை கத்தி அழவே உள்ளே இருந்த பெற்றோர் பதறி அடித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது நாய்கள் குழந்தையை கடித்து குதறிக்கொண்டிருந்தது.
இதனை கண்டதும் பதறி போன பெற்றோர், நாய்களை துரத்தி விட்டு, குழந்தையை கையோடு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். இரவு நேரத்தில் அங்கே அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் உடலில் சுமார் 10-கும் மேற்பட்ட நாய் கடித்துள்ள தடங்கள் இருந்துள்ளது. குழந்தை இறந்த செய்தியை கேட்ட பெற்றோர் மருத்துவமனை வாசலிலே துடிதுடித்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் கடித்து குதறி பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அண்மை காலமாக தெரு நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இதே போல் தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொடூரமாகத் தாக்கி வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட கர்நாடகாவில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுவனை, திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதறியுள்ளது. அந்த நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர், நாய்களை துரத்தி இரத்த வெள்ளத்தில் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!