India
Tuition சென்ற 5 வயது சிறுவன் மாயம்: பக்கத்து வீட்டின் fridge-ஐ திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஏகான்ஷ் கடந்த புதனன்று மாலை தனது வீட்டில் இருந்து டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுவன் டியூஷன் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுவன் கிடைக்கவில்லை. பிறகு டியூஷனுக்கு சென்று கேட்டபோது சிறுவன் அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் சிறுவனிடம் டியூஷன் படிக்கும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் அதேப் பகுதியில் உள்ள சந்தோஷ் சவுராசியா என்பவரது வீட்டிற்குச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியைத் திறந்துபார்த்தபோது அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் சவுராசியாவை தேடி வருகின்றனர். சிறுவன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவனின் உடல் வீட்டின் குளிர்சாதன பெட்டியிலிருந்து போலிஸார் மீட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!