India
பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக்வெட்டிய அடுத்த நொடியே காதலியை கொன்ற காதலன்: விசாரணையில் பகீர்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர் நவ்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. காதலி நவ்யா வேறு சிலரோடு பேசி வந்ததால், காதலன் பிரசாந்த்திற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி நவ்யாவின் பிறந்தநாள் வந்துள்ளது. அன்றைய தினம் பிரசாந்த் வெளியே சென்றதால் காதலியின் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை.
பின்னர் நேற்று முன்தினம் காதலியின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன்படி நவ்யாவின் பிறந்த நாளை கேக்வெட்டி இருவரும் கொண்டாடியுள்ளனர்.
அப்போது திடீரென பிரசாந்த் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துக் காதலி நவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு அடுத்தநாள் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது நவ்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பிரசாந்த் அமர்ந்திருந்தார். பிறகு அவரை பிடித்து போலிஸார் நடந்தவற்றை விசாரித்துள்ளனர். காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியைக் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!