India
40 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 13 பேர் பலி: அதிகாலையில் நடந்த கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்பிள் குரவ் என்ற இடத்திலிருந்து கோரேகானுக்கு 41 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து ராய்காட்டின் கோபோலி என்ற பகுதிக்கு இன்று அதிகாலை வந்தபோது திடீரென நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.
இதில் பேருந்து முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார், மீட்புக் குழுவினர் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இதுவரை இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களது உடல்களை மீட்டு அவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து எப்படி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!