India
திருமணத்திற்கு பரிசாக வந்த Home Theatre-ஆல் இடிந்து விழுந்த வீடு: புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!
சத்தீஸ்கர் மாநிலம், சமரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி. இளைஞரான இவருக்கு மார்ச் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது புது தம்பதிகளுக்குப் பலரும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த பிறகு தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களைப் புதுமாப்பிள்ளையும் அவரது உறவினர்களும் வீட்டில் வைத்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பெரிய பரிசு பொருளில் ஹோம் தியேட்டர் இருந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். உடனே அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு ஹோம் தியேட்டரில் பாடல் கேட்க முடிவெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மின்சார போர்டில் வயரை இணைத்து விட்டு ஹோம் தியேட்டரை இயக்கி உள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்துள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாட்டில் வீட்டின் உள் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா மேராவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து மாப்பிள்ளையின் சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒருவயது சிறுவன் உட்பட 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்குச் சகோதரர் ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹோம் தியேட்டர் வெடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !