India

ஓடிக் கொண்டிருந்த போது பற்றி எரிந்த பேருந்து.. பதறியடித்து வெளியேறிய பயணிகள்: நடுரோட்டில் நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து அமராவதிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 16 பயணிகள் இருந்துள்ளனர். இப்பேருந்து கொண்டலி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் ஜாஹிர் ஷேக் உடனே பேருந்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் பேருந்திலிருந்த 16 பயணிகளையும் வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து அனைவரும் பேருந்தை விட்டு வெளியே வந்த சில நிமிடத்திலேயே பேருந்து முழுவதும் பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் கிடைத்தவுடன் நாக்பூர் மாநகராட்சியின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பேருந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஆனால் தீயில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் 16 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாக்பூர் அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ.. உ.பியில் பதுங்கியிருந்த நபரை தட்டி தூக்கிய கேரள போலிஸ்: பிடித்தது எப்படி?