India
மும்பை விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட முதியவர்.. Indigo விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!
தாய்லாந்து தலைநகரம் பேங்க்காக்கில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் எரிக் ஹெரால்டு ஜோனஸ் (வயது 63) என்ற சுவீடன் நாட்டு பயணியும் பயணித்துள்ளார்.
அப்போது விமானத்தில் எரிக் விமானப் பணிப் பெண்ணிடம் சாப்பிட மீன் கேட்டுள்ளார். ஆனால், இந்த விமானத்தில் மீன் வழங்கப்படாது எனக் கூறி அதற்கு பதிலாக சிக்கன் தருவதாக கூறியுள்ளார். இதனை எரிக் ஏற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு பணிப்பெண் சிக்கன் உணவை கொடுத்துள்ளார்.
அப்போது சாப்பாட்டுக்கு கட்டணம் செலுத்த ஏடிஎம் கார்டை அந்த பெண் வாங்கியபோது எரிக் அந்தப் பணிப்பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் தவறாகவும் நடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பணிப்பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், சக பயணிகள் அவரை இருக்கையில் அமரவைத்துள்ளனர்.
அதன்பின்னரும் விமான பணிப்பெண்களை பார்த்து ஆபாசமாக பேசுவதை தொடர்ந்துள்ளார். இதன்பின்னர் பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானத்தின் கேப்டனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் விமானம் தரையிறங்கியதும் இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் எரிக்கை கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பயணி குடிபோதையில் இதுபோன்று நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!