India
2 மாத குழந்தையை வைத்து விளையாடிய சிறுமிகள்.. பொம்மைபோல் நினைத்ததால் நேர்ந்த சோகம்.. ம.பியில் அதிர்வலை !
மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் என்ற பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இங்கு தம்பதி ஒருவருக்கு ஏற்கனவே 4 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது.
இந்த சூழலில் கணவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது மனைவி வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். எனவே தனது 2 மாத குழந்தையை படுக்கையில் படுக்க வைத்திருந்தார். அப்போது வீட்டிலிருந்த 6 & 8 வயது சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் படுக்கையில் இருந்த குழந்தையை கண்டதும் அதனுடன் விளையாட எண்ணினர்.
அதன்படி விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் அந்த குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் என்று எண்ணி, பாத்ரூமுக்குள் கொண்டு சென்று குளிக்க வைத்துள்ளனர். அந்த சமயத்தில் வாளி தண்ணீரில் குழந்தையை முக்கியுள்ளனர். பின்னர் வாளிக்குள் இருந்து குழந்தையை எடுக்க முயன்றபோது, குழந்தை வரவேயில்லை. எனவே அந்த வாளியை மூடி வைத்து விட்டு சிறுமிகள் மீண்டும் விளையாட தொடிங்கினர்.
இவை ஏதும் அறியாத தாய், தனது கைக்குழந்தையை பார்க்க சிறிது நேரம் கழித்து வந்துள்ளார். அப்போது குழந்தை அங்கே இல்லை. எனவே குழந்தையை அங்கும் இங்கும் தேடி அழைந்தார். அப்போதும் கிடைக்கவில்லை என்பதால் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். கடந்த 22-ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். தொடர்ந்து குழந்தை கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வந்த அவர்கள் வீட்டையும் சோதனை செய்தனர். அப்போது குழந்தை இறந்த நிலையில் சடலமாக வாளிக்குள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த அனைவரிடமும் விசாரிக்கையில், 4 & 6 வயது சிறுமிகள், நடந்ததை கூறினர்.
இதுகுறித்து சிறுமிகள் கூறுகையில், தங்கள் தாய் டெடி பியர் பொம்மையை துவைத்து காயவைப்பது போல் தாங்களும் அந்த குழந்தையை குளிக்க வைத்து காயவைக்க எண்ணியதாகவும், ஆனால் குழந்தை வாளியை விட்டு வெளியே வரவில்லை என்பதால் மூடி வைத்து விட்டதாகவும் தங்கள் மழலை மொழியில் சோகமாக கூறினர்.
இதையடுத்து சிறுமிகள் இதனை அறியாமல் செய்ததை உணர்ந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 82வது பிரிவின்படி, 7 வயதுக்குட்பட்ட குழந்தை செய்த குற்றத்தை பதிவு செய்ய முடியாது. எனவே சிறுமியரின் வயது காரணமாக, அவர்களின் செயல் குற்றமாகக் கருதப்படவில்லை என நர்மதாபுரம் எஸ்பி குர்கரன் சிங் தெரிவித்துள்ளார்.
2 மாத குழந்தையை பொம்மை போல் பாவித்து 2 சிறுமிகள் விளையாடியதில் அந்த குழந்தை இறந்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!