India
”மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல” : இந்தியில் பேசிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்!
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் என்.பி.பி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக கான்ராட் சங்கமா பதவியேற்றார்.
இதையடுத்து மேகாலயா அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் 20ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டத் தொடர் என்பதால் சட்டப்பேரவையில் ஆளுநர் பாகு சவுகான் உரையாற்றினார்.
அப்போது அவர், ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசினார். இதனால் அவரின் பேச்சுக்கு விபிபி கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்டென்ட் மில்லர் பசாயவ்மொய்ட் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் ஆளுநர் இந்தியில் பேச அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் ஆளுநரை இந்தியில் பேச அனுமதித்தார். இதனால் ஆர்டென்ட் மில்லர் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்துக் கூறிய ஆர்டென்ட் மில்லர், "இந்தி பேசும் ஆளுநர்களை எங்கள் மாநிலத்திற்கு அனுப்புவதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல.
மொழி பிரச்சனையால்தான் அஸ்ஸாமில் இருந்து பிரிந்து செல்ல மேகாலயா மக்கள் முடிவு செய்தனர். 'காசி' மற்றும் 'காரோ' மொழிகளை 8வது அட்டவணையில் (அரசியலமைப்புச் சட்டம்) சேர்க்க வேண்டும் என்ற மேகாலயாவின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இது மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது, எங்களுக்குப் புரியாத மொழியில் கவர்னர் பேசியதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!