India
கலாச்சாரத்துக்கு எதிரானது.. பெண்கள் கூடும் நிகழ்வை தடுத்து நிறுத்திய பஜ்ரங் தள்.. கர்நாடகாவில் பரபரப்பு !
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
பசு இறைச்சி வைத்துள்ளதாக பொதுமக்கள் அடித்து கொள்வதும், காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதும் என நாட்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவில் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவாக பாஜக ஆதரவு அமைப்புகள் கலவரம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது பெண்கள் கூடும் நிகழ்ச்சியை கலாச்சாரத்துக்கு எதிரானது எனக் கூறி ஹிந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஷிவமொகா நகரில் உள்ள கிளிஃப் எம்பசி ஹோட்டலில் பெண்கள் கூடும் நிகழ்வான 'லேடீஸ் நைட்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
அப்போது அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் பெண்கள் கூடும் நிகழ்வு பாரத கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும், இது இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்தவர்களை வெளியேற்றினர்.
இது தவிர ஹோட்டலுக்கு வெளியே பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் போலிஸார் அந்த இடத்துக்கு வந்தபோதிலும் அவர்கள் பஜ்ரங் தள் அமைப்பினரை களைந்துபோக செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாறாக நிகழ்ச்சியை நிறுத்த சொன்னதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?