India
கணவரின் தங்கையை திருமணம் செய்த பெண்.. கணவரின் நிலை ? பீகாரை உலுக்கிய செய்தியின் பின்ணணி என்ன ?
பீகார் மாநிலம் சமஸ்திபூர் என்ற பகுதியை சேர்ந்தார் பிரமோத் தாஸ். இவருக்கும் சுக்லா தேவி (32) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், மாமியார், நாத்தனார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இவரால் திருமணம் முடிந்து ஆரம்பத்தில் சுக்லாவும், இவரது கணவரின் தங்கையான சோனு (18) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கவே, இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். இப்படியே தொடர்ந்து சென்ற இவர்களது நட்பு சுக்லாவுக்கு காதலாக தெரிந்து, தனது நாத்தனாரான சோனுவை காதலிக்க தொடங்கியுள்ளார்.
ஒரு நாள் இந்த காதலை சோனுவிடம் அவர் தெரிவிக்கவே, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்துள்ளார். பின்னர் சோனுவும் சுக்லாவை காதலிக்க தொடங்கினார். இருவரது காதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி வீட்டை விட்டு இருவரும் வெளியேறிவிட்டனர்.
பின்னர் கணவர் பிரமோத் தாஸ் தனது மனைவி மற்றும் தங்கையை காணவில்லை என்று தேடியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து தாஸை தொடர்பு கொண்ட மனைவி சுக்லா, தானும் சோனுவும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதாகவும், தங்களை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனால் உடைந்து போன தாஸை அவரது தாயார் சமாதப்படுத்தியுள்ளார்.
அதோடு இந்த சம்பவத்தால் தங்கள் குடும்பத்தின் மானம் போய்விட்டதாக எண்ணிய தாய், அவர்களை தேடி கண்டுபிடித்து இருவரையும் பிரித்து சோனுவை வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார். பின்னர் இதுகுறித்து சுக்லா காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆரம்பத்தில் இது பெரிதாக தெரியவில்லை. பின்னரே நாங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். சுக்லாவின் காதலை இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது. சுக்லா, தனது காதலி சோனுவுக்காக தன்னை ஆண் போல வடிவமைத்துக்கொண்டுள்ளார்.
ஒரு ஆண் எப்படி இருப்பாரோ அதை போலவே தலைமுடியை வெட்டி, உடைகள் அனைத்தையும் மாற்றியுள்ளார். மேலும் தனது பெயரை சூரஜ் குமார் என்று மாற்றிக்கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். இது தற்போது பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் : 35.5 லட்சம் பேரை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு!
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!