India
என்னை திருமணம் செய்யாவிட்டால்.. மிரட்டிய காதலி.. பயத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலன்.. உ.பி.யில் சோகம் !
உத்தர பிரதேச மாநிலத்தின் பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார் ( வயது 24).இவரும் அதே பகுதியை சேர்ந்த மோனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் இவர்கள் திருமணத்துக்கு இருவரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் காதலை கைவிட திலீப் குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு மோனா மறுத்து காதலை தொடரவற்புறுத்தியுள்ளார். இதனிடையே திலீப் குமாருக்கு அவரின் பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்,.
இந்த சம்பவம் திலீப் குமாரின் காதலிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் திலீப்பை சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு திலீப் மறுத்த நிலையில், என்னை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்தால் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிப்பேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திலீப் மிகுந்த மனவுளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் கடந்த சனிக்கிழமை அன்று அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று , மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலிஸார் திலீப் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், "காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் என்று மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன்" என எழுதியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!