India
வன்கொடுமை செய்யப்பட்ட அமெரிக்க பாட்டி.. புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் வடமாநில இளைஞர் வெறிச்செயல் !
இந்தியாவை நாள்தோறும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் சுற்றி பார்க்க வருவர். அப்படி சுற்றி பார்க்க வருபவர்களில் சிலர் தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளையும் கண்டுகளிக்க வருவர். அப்படி வந்தவர்களில் சிலருக்கு இந்தியர்களால் சில அத்துமீறல்கள் ஏற்படுவது உண்டு அப்படி ஒரு சம்பவம்தான் இப்பொது அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சியை சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார். முன்னதாக பல மாநிலங்கைளை சுற்றி பார்த்த அவர், தற்போது புதுச்சேரிக்கு வந்துள்ளார். அங்கே இருக்கும் கடற்கரை உள்ளிட்டவையை சுற்றி பார்க்க முனைப்பு கட்டி வந்துள்ளார்.
அப்போது புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப்பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சென்றுள்ளார். அங்கே ஒரு வட மாநில நபர் ஒருவர் நடத்தும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் மெஹ்ராஜ் பட் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர். மொபைல் மூலம் பேசி இருவரும் நண்பர்களாக மாறினர்.
புதுவையில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்த இந்த மூதாட்டி தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளார். அப்போது இருவரும் போனில் பேசும்போது இருவரும் மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி மீண்டும் புதுவைக்கு திரும்பிய இந்த மூதாட்டி, தான் இருந்த ஓட்டலுக்கு இவரை அழைத்துள்ளார். இருவரும் திட்டமிட்டபடி நேற்று இரவு (ஜன., 31) சந்தித்துள்ளனர்.
அப்போது இருவரும் ஒன்றாக உணவும் அருந்தியுள்ளனர். இதையடுத்து இருவரும் தனியாக இருந்ததால், மெஹ்ராஜ் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதற்கு மூதாட்டி முழுமையாக மறுப்பு தெரிவித்தும், அவர் வலுக்கட்டய படுத்தியுள்ளார். மறுநாள் காலை மூதாட்டி, தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதால், தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நபர், அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து மூதாட்டியே தனியாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது பிறப்புறுப்பில் காயம் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தனக்கு நேர்ந்ததை மூதாட்டி கூறினார். இதனை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டு புகாரை பெற்றனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட மெஹ்ராஜ் பட்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவரை புதுவையை சேர்ந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!