India
கேள்வி கேட்ட கணவன் மீது ஆசிட் வீசிய மனைவி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கூப்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தப்பு குப்தா. இவரது மனைவி பூனம். இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்று இருந்த பூனம் இரவு வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கணவன் தப்பு குப்தா, 'ஏன் தாமதமாக வீட்டிற்கு வந்தாய்' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் மனைவியை கொடுமையாக அடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் வீட்டின் குளியல் அறையில் இருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கணவன் தப்பு குப்தா முகத்தில் வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் அவர் அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு வந்து பார்த்த அப்பகுதி மக்கள் ஆசிட் வீச்சால் வெந்து கொண்டிருந்த அவரது முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதைக்கு அடிமையான தப்பு குப்தா தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். அதில் ஆத்திரமடைந்ததால்தான் அவர் கணவன் மீது ஆசிட் வீசியது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தனது மனைவி பூனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தப்பு குப்தா போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!