India
உணவு டெலிவரி செய்வது போல பழக்கம்.. பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர்.
அப்போது அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வைத்து சோதனை செய்ததில் அவர் ர்ணாகுளத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலிஸார் ஒரு விடுதியில் ஒரு இளைஞரோடு அவர் இருப்பதை அறிந்துகொண்டனர்.
பின் பெண்ணை மீட்ட போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உம்மைகள் தெரியவந்தது. அதன்படி அந்த இளம்பெண்ணோடு இருந்த இளைஞர் பெயர் அகில் (வயது 21) என்பதும், அவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அப்படி உணவு டெலிவரி செய்த இடத்தில் தான் இந்த பெண் அறிமுகமானதும், பின்னர் தொடர்ந்து அவர் அந்த பெண்ணோடு பழகி அவரை காதலிப்பதாக கூறி எர்ணாகுளம் அழைத்து சென்று அங்கு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அந்த இளைஞரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் இதே பாணியில் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை இவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதோடு மற்ற பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதேநேரம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையே அந்த இளைஞருக்கு திருமணம் செய்துவைத்தனர்.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?