India
நடு வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்திய போர் விமானம்.. பயிற்சியின் போது நடந்த விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமானங்கள் பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் அருகே சென்றபோது இரண்டு விமானங்கள் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோதிக் கொண்ட இரண்டு விமானமும் மொரீனா என்ற பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த அங்குச் சென்ற போலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்துக்களான விமானம் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் விபத்து நடப்பதற்கு முன்பே விமானத்தின் பைலட் வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து பனி மூட்டம் காரணமாக நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டபோது எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் உயர் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று ராஜஸ்தானிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளனது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரத்திற்குள் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதால் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!