India
மண்ணில் புதையும் ஜோஷிமத்..வெளியேறிய மக்கள்.. சிக்கிக்கொண்ட விலங்குகள்..மீட்பு பணியில் தொண்டு நிறுவனங்கள்!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதியின் மலைப்பகுதியில் ஜோஷிமத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நகரத்தை சுற்றியுள்ள மலை பகுதியில் சளி நாட்களாக திடீர் திடீர் என நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம்,பெருமழை போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்காத நிலையில், நிலச்சரிவுகள் ஏற்பட்டது அந்த நகர மக்களிடையே பீதியை ஏற்பட்ட நிலையில், அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பியுள்ளனர்.
ஆனால், நாளாக நாளாக நிலமை மோசமடைந்துள்ளது. சில வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், வேறு சில வீடுகளின் கட்டிடங்களும் விரிசல் விடத்தொடங்கியுள்ளது. இதனால் உஷாரான உத்தராகண்ட் அரசு அங்கு அறிவியலாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அந்த நகரமே சில நாட்களில் மண்ணில் புதைந்து விடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.அதனைத் தொடர்ந்து அந்த நகரில் இருப்பவர்களை மீட்கும் பணியில் அரசு முழு வீச்சில் இறங்கியது. ஆனால் அதற்குள் அந்த நகரத்தை பிற பகுதிகளோடு இணைக்கும் சாலைகள் உடைந்து மண்ணில் புதையத்தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழலில், 849க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மண்ணில் புதைந்து வரும் நக்ராடில் சிக்கியிருக்கும் மக்களை நிலம் வழியாக மீட்கமுடியாது என்பதால் மீட்புப்பணியில் 5 ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.எந்நேரமும் அந்த நகரம் மண்ணில் புதையலாம் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த நகரை போலவே மற்றொரு நகரம் மண்ணில் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டின் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பகுகுணா நகரில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சம்பவங்களால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 269 குடும்பங்களைச் சோந்தவா்கள், தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். மேலும், பலர் அங்கிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர், ஆனால் அந்த நகரில் பல்வேறு வளர்ப்பு விலங்குகள் சிக்கியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள விலங்குகளை மீட்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
அந்த நகரில் 200 நாய்கள், 300 கால்நடைகள், 20 குதிரைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக, 'சா்வதேச மனிதாபிமான சமூகம்' அறிவித்துள்ளது. இதனால் அதற்கு தினசரி உணவு வழங்கவும், முடிந்தால் அந்த இடத்தில் இருந்து விலங்குகளை மீட்கவும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு அந்த பகுதியில் இரண்டு கால்நடை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?