India
பெற்ற குழந்தையை சன்னல் வழியே தூக்கி வீசி இளம் பெண்.. நவிமும்பை பகுதியில் நடந்த கொடூரம்!
மும்பையில் நவிமும்பை உல்வே பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் கீழே பிறந்து சில மணிநேரமாகிய குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலிஸார் விரைந்துவந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணையை தொடங்கினார்.
விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சன்னலில் கம்பி இல்லாததைக் கண்டுபிடித்த போலிஸார் அந்த வீட்டில் விசாரித்தபோது, அந்த வீட்டில் உள்ள இளம் பெண்ணுக்கு வயிறு வழி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
பின்னர் அந்த இளம் பெண்ணிடம் விசாரத்த போது, தனது உறவினருடன் உறவில் ஈடுபட்டதால் கர்ப்பமாகிவிட்டதாக தெரியவந்தது. 8 மாதம் ஆனபிறகும் வயிறு பெரியதாக ஆகாததால் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார். அதன்பின்னர் இரவு நேரத்தில் கழிவரையில் வழி ஏற்பட்டபோது குழந்தை பிறந்ததாகவும், பின்னர் சன்னலில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!