India

தொண்டு நிறுவனத்தின் ரூ. 65 லட்சம் நிதியை அபகரித்தார்.. அன்னா ஹசாரே மீது உயர்நீதிமன்றத்தில் புகார் !

மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்ட பேர் ஏற்பட்டது. மேலும், ஊழலை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்பட்டது. ஆனால், அதனபின்னர் அன்னா ஹசாரே அரசியலில் இருந்து காணாமல் போனார்.

இதன் காரணமாக அவர் பாஜகவுக்கு மறைமுகமாக வேலைபார்த்தார் என்றும், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதே அவருக்கு வழங்கப்பட வேலை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் இருந்த கிரண் பேடி பாஜகவில் இணைந்த நிலையில், மற்றொரு தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியை தொடங்கி தற்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளார். இது இரண்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களாகும்.

இந்த நிலையில், சமூக சேவகர் அன்னா ஹசாரே நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை சமூக சேவைக்காக அளிக்காமல் அவரே அபகரித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்மா என்பவர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,அன்னா ஹசாரே 'ஹசாரே ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்' என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி மாநில அரசிடமும் 65 லட்சம் ரூபாயை வாங்கி அதனை அபகரித்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், . இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த மனு குறித்த விசாரணை 4 வாரத்துக்குள் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: காணாமல் போன மனைவி .. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. நரபலியை தொடர்ந்து கேரளாவில் அதிர்ச்சி !