India
விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.. நீதிமன்றத்தில் குற்றவாளியின் பதிலால் வழக்கில் திருப்பம்!
நியூயார்க்கில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அருகில் இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது.இந்த சம்பவம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் இது குறுய்த்து காவல்நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் ஒன்றை அளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி சம்பவம் பொது அரங்கில் வெளியானது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின்னர் இந்த சம்பவத்தின் ஈடுபட்டது சங்கர் மிஸ்ரா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. மேலும் ஊடகங்களில் அவரின் புகைப்படமும் வெளிவந்தது.
இந்த சம்பவம் வெளியான நிலையில், அவர் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், அவரின் மொபைல் எண்ணை வைத்து அவர் பெங்களுருவில் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த சங்கர் மிஸ்ராவை போலிஸார் அதிரடியாக கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் முன்பு சங்கர் மிஸ்ரா அழைத்து வரப்பட்ட போது அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் வேலை செய்து வந்த வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பெண் மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை என சங்கர் மிஸ்ரா பதில் கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத Incontinence என்ற பிரச்னை உள்ளது, அதனால் அவரேதான் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இது ஸ்ரவ்ஹாயை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!