India

பேசும்போது திடீரென வெடித்த Realme 8 செல்போன்.. துண்டான கை விரல்: மருத்துவமனையில் வாலிபர்!

உத்தர பிரதேச மாநிலம் ஹிசாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.16 ஆயிரம் கொடுத்து Realme 8 செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்துள்ளது. இதில் அவரது விரலில் சிறிய தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 'என் விரல்களில் சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தேன்' என ஹிமான்ஷி தெரிவித்துள்ளார்.

அதோடு வெடித்த செல்போனையும், அதன் பில்லையும் இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது செல்போன் வெடித்ததில் பள்ளி சிறுவன் காயமடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாங்கிய புதிய செல்போன் வெடித்ததில் 28 வயது வாலிபர் ஒருவர் காயமடைந்தார். இப்படி தொடர்ச்சியாகவே இந்தியாவில் செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த பயணி.. சம்மந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்தது அமெரிக்க நிறுவனம்!