India
BSNL வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. - வரப்போகிறது 4G, 5G சேவை.. எப்போது தெரியுமா ?
நமது தாத்தா காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் ஒரே மொபைல் நெட்ஒர்க் என்றால் அது BSNL தான். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் இந்த நெட்ஒர்க் சேவை, இந்தியர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை இந்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் ஏர்டெல், ஜியோ, ஒடோபோன் - ஐடியா உள்ளிட்ட தனியார் நெட்ஒர்க்கையே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் பலரும் இன்னமும் BSNL-ஐ பயன்படுத்துகின்றனர். இப்படி புது புது நெட்ஒர்க் வந்த போதிலும், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் சேவையை 3G, 4G, தற்போது 5G வரை உயர்த்தியுள்ளது.
ஆனால் BSNL-ஓ தங்கள் நெட்ஒர்க்கை இன்னுமும் 3G சேவையிலேயே வைத்து வருகிறது. மொபைல் போன் கூட தற்போது 5G வரை வந்துவிட்டது. இதனிடையே BSNL-ஐ 4Gக்கு மாற்றும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன. இருப்பினும் அதனை செவிகொடுக்காத அந்நிறுவனம், வெறும் சிம் கார்டை மட்டும் 4Gக்கு மாற்றி, சேவையை 3Gலேயே வைத்துள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அடுத்தாண்டு BSNLக்கு 5ஜி சேவை வரும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த 2023-ம் ஆண்டு BSNL வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கு BSNL வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும்" என்று கூறினார். இதனால் BSNL வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!