India
மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.47 லட்சம் பண மோசடி - NR.காங்கிரஸ் நிர்வாகி கைது !
புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் பரிமேல் செல்வன். இவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, மதகடிப்பட்டை சேர்ந்த சந்திரன் என்பவர், புதுச்சேரி ஆளும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் மதகடிப்பட்டு வெங்கடேசனை (70) அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனை அடுத்து பல்கலைக்கழகத்தில் நான்கு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அனைத்து பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டும் என்று வெங்கடேசன் பரிமேல் செல்வனிடம் தெரிவித்ததை அடுத்து, பரிமேல் தனது உறவினர்கள், நண்பர்கள் என நான்கு பேரை சேர்த்துகொண்டு வேலை வாங்கி தருவதற்காக ரூ. 47 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வெங்கடேசன், அவரின் மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
பின்னர் வெங்கடேசனிடம் வேலை குறித்து கேட்டபோதெல்லாம், பல காரணங்கள் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பரிமேல் செல்வன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இது தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலிஸார் வெங்கடேசனின் மனைவி சாந்தி, மகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து மதகடிப்பட்டில் இருந்த வெங்கடேசன், சந்திரன் ஆகியோரை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அவரது உறவினர்களை போலீசார் தேடி வரும் நிலையில், வெங்கடேசன் மீது புதுச்சேரி தமிழகம் மற்றும் கேரளாவில் பல பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே மோசடியில் ஈடுபட்ட வெங்கடேசனை கட்சியிலிருந்து நீக்குவதாக என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால் அறிவித்துள்ளார்
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!