India
காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டிய இளைஞருக்கு 20 பெண்களுடன் தொடர்பு.. டெல்லியை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி !
மும்பையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்த ஷர்தா என்ற இளம்பெண்ணுக்கும், அஃப்தாப் அமீன் பூனாவாலா என்ற நபருக்கும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
பின்னர் இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஷ்ரதா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை; அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து அமீனை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த அமீன் காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு ஹாலிவுட் கிரைம் படம் பார்த்து அதன்படி தனது காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கொதிக்கும் தண்ணீரில் ப்ளீச்சிங் பெளடரை போட்டு, அதில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை வைத்து ஊறவைத்துள்ளார்.
பின்னர் அதனை தனித்தனியே பேக்கிங் செய்து அந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து துர்நாற்றம் வராமல் இருக்க வாசனை திரவியம், ஊதுபத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளார். பின்னர் வெட்டப்பட்ட உடல் பாகங்களை 18 நாட்களாக காட்டு பகுதி, மலைப்பகுதி உள்ளிட்டவைகளில் அப்புறப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் வெளிவந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அஃப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வாக்குமூலம் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த கொலை குறித்து போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தன் காதலியைக் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டியதை அஃப்தாப் ஒப்புக்கொண்டான் என்றும், ஷ்ரத்தா தவிர டேட்டிங் ஆப் மூலம் 15 முதல் 20 பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்திருப்பதையும் அஃப்தாப் ஒப்புக்கொண்டான் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!