India
பாலியல் வன்கொடுமை.. கர்ப்பமானதால் சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்த ஆசிரியர்.. ம.பி-யில் அதிர்ச்சி !
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை திருமணம் செய்வதாக கூறி விஷம் கொடுத்து கிணற்றில் வீசி கொன்றுள்ள ஆசிரியரின் செயல் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவேந்திரா. BSc chemistry (வேதியியல்) படித்திருக்கும் இவர், அந்த பகுதி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பள்ளியில் 17 வயதுடைய மாணவி ஒருவரும் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் இருக்கும் பழக்கம் நெருக்கமாக மாற, ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர்களுக்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து மாணவி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இதனால் மாணவி சிறிது நாட்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உடனே ஆசிரியரிடமும் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதை கேட்டதும் ஆசிரியர் பயந்துபோக, உடனே கருவை கலைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த கரு இருந்தால் சிறுமி உயிருக்கே ஆபத்து என்று கூறி அவரை பயமுறுத்தினார். இதனால் சிறுமியும் கருவை கலைக்க சம்மதித்தார். அதன்படி ஆசிரியர் சிறுமிக்கு ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் சிறுமி மயக்கமடைந்தார். இதையடுத்தே தான் சாப்பிட்டது விஷம் என்பது தெரியவந்தது. சிறுக உயிரிழந்ததையடுத்து அவரது சடலத்தை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கே இருந்த வற்றி போன கிணறு ஒன்றில் சிறுமியின் உடலை போட்டுவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் சடலத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியை கொன்றது ஆசிரியரை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ மாற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!