India
நீதிமன்றம் அருகே நின்றிருந்த இளம் பெண் சுட்டுக்கொலை.. பட்டப்பகலில் பஞ்சாபில் நடந்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலம், பலியானவர் பதிண்டாவில் உள்ள கோட்ஷாமீர் பகுதியைச் சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். இவர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்றுகொண்டு இருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தாங்கள் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் குல்விந்தர் கவிரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த போலிஸார் ரத்தவெள்ளத்திலிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் குல்விந்தர் கவுர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குல்விந்தர் கவுர் தொலைப்பேசி மற்றும் கைப்பை ஒன்றை போலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 2 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நீதிமன்ற வளாகம் அருகே இளம் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது என்ன?
-
ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
-
திருவண்ணாமலை மக்களின் நலனுக்காக... ரூ.2,095 கோடியில் திட்டப் பணிகள்... முதலமைச்சர் அசத்தல்!
-
“உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!