India
திருமண தடை நீங்க வேண்டும்.. - போலி மந்திரவாதியின் பேச்சை கேட்டு சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியர் !
மூட நம்பிக்கையின் காரணமாக திருமண தடை நீங்க வேண்டும் என்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆசிரியரின் செயல் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற பகுதி அருகே தனியார் பள்ளி ஒரு செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் படிக்கும் இந்த பள்ளியில் 37 வயதுடைய ஆசிரியரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் தன்னை வன்கொடுமை செய்தது, தங்கள் பள்ளி ஆசிரியர் என்பதையும் சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில், 37 வயதாகியும் அந்த ஆசிரியருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் கோயில், ஜாதகம் என்று அழைத்து திரிந்துள்ளார்.
அப்போது ஆசிரியருக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் மந்திரவாதி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவரோ, ஆசிரியருக்கு திருமண தடை இருப்பதாகவும், அதற்காக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கன்னி பெண்ணின் அந்தரங்க உறுப்பின் இரத்தம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எனவே ஆசிரியரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
ஆசிரியர் அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடர்புடைய மந்திரவாதியையும், ஆசிரியருக்கு உடந்தையாக இருந்தவரையும் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூட நம்பிக்கையின் காரணமாக திருமண தடை நீங்க வேண்டும் என்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!