India
காதலன் பேசாததால் விஷம் அருந்திய சிறுமி.. உடன் இருந்த தோழிகளும் விஷம் குடித்த சோகம்.. ம.பி-யில் அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம் சஹோரே மாவட்டத்தில் உள்ள அஸ்தா என்ற நகரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் சமூக வலைத்தளம் மூலம் இந்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர் அந்த பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த சிறுமி பலமுறை போனில் அழைத்தும் அவர் எடுக்காமல் இருந்துவந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது காதலனை தேடி இந்தூர் செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதற்காக தன்னுடன் வகுப்பில் படிக்கும் தனது இரு நெருங்கிய தோழிகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு காதலனைத் தேடி இந்தூர் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ஒரு பூங்காவில் இருந்து காதலனுக்கு போனில் அழைத்துள்ளார். அப்போது போனை காதலர் எடுத்த நிலையில், தான் இந்தூர் வந்திருப்பதாகவும் வந்து தன்னை சந்திக்குமாறும் கூறியுள்ளனர்.
ஆனால், காதலர் வர மறுக்கவே தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் காதலர் வராத நிலையில் தான் சொன்னபடி கையில் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தோழிகளும் விஷத்தை அருந்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி விழ அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனலிக்காமல் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் போலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!