India
டீ பிரியர்கள் அதிர்ச்சி.. மூலிகை டீ குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி: காரணம் என்ன?
உத்தர பிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது வீட்டில் வழக்கம்போல் அவரது மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த சிவானந்தம், இவரது ஆறு வயது மகன் ஷிவாங் மற்றும் ஐந்து வயது மகன் திவ்யான்ஷ் ஆகியோர் டீ குடித்துள்ளனர்.
மேலும் அப்போது வீட்டிற்கு வந்த மாமா ரவீந்திரசிங் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் ஆகியோருக்கும் மூலிகை டீ குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து பேரும் அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஐந்து பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிவானந்தத்தின் மனைவி டீ தயாரித்த மூலிகைச் செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது என தெரியவந்துள்ளது. மேலும் விஷம் கலந்து டீ கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூலிகை டீ குடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!