India
"மொழியை வைத்து மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் BJP": நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,நேற்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் தனது நடைபயணத்தை நிறைவுசெய்தார்.
இதையடுத்து, ஆந்திர மக்களின் அமோக ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரப் பிரதேச நடைபயணத்தின் போது பலதரப்பட்ட குழுக்களுடன் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மக்களைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், அமராவதியில் ஒரே தலைநகரை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களை ஒருவரையொருவர் மோத வைக்கும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கிடப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீவிரமான இந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !