India
நடுவானில் கேபினுக்குள் இருந்து வெளியேறிய புகை.. அலறித்துடித்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?
குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் பக்கவாட்டு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதேப்போல, டெல்லியில் இருந்து மும்பை வழியாக 138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் மேல் பறந்துகொண்டிருந்தது. அப்போது, இடது புற இறக்கையில் , எரிபொருள் கசிவு இருப்பதாக விமானிக்கு குறியீடு காட்டியுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி கேட்டார். அதன் படி அனுமதி தரப்பட கராச்சி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது. ஆனால் அங்கிருந்து சுமார் 45 நிமிடங்கள் ஆகியும் பயணிகளை ஏற்றிச்செல்ல பேருந்து வராமல் இருந்துள்ளது. இதனால் பயணிகள் 1 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர்.
இதனிடையே டெல்லியில் இருந்து கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் காற்று பற்றாக்குறை ஏற்பட்டதால் பயணிகளுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களில் இதுபோன்று எட்டு சர்ச்சைகளில் ஸ்பைஸ்ஜெட் விமானம் சிக்கியது அந்நிறுவனத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் கியூ400 விமானம் ஒன்று நேற்றிரவு கோவாவிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் விமானம் தரையிறங்க தயாராகும் போது திடீரென கேபினுக்குள் புகை வருவதைக் கண்டு விமானி அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பின் ஐதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்த 86 பயணிகள் அவசரகால வழி மூலம் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நிலையில், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!