India

2 பெண்கள் நரபலி.. பிணத்தை சாப்பிட்ட தம்பதி.. பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேறிய கொடூரம் !

கேரள மாநிலம் கொச்சி, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பகவந்த் சிங் - லைலா தம்பதியினர். இவர்களுக்கு முகநூல் மூலம் முஹம்மது ஷாஃபி என்ற போலி மந்திரவாதி அறுமுகமாகியுள்ளார். அந்த முஹம்மது ஷாஃபி இவர்களிடம், விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் ஒரு பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான பெண்ணை தானே கூட்டி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

நரபலி வழக்கில் கைதான தம்பதியினர் லைலா - பகவல் சிங்

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவிலுள்ள காலடி என்ற பகுதியைச் சேர்ந்த லாட்டரி சீட்டு விற்று வந்த ரோஸ்லி என்ற பெண்ணை அணுகியுள்ளார். அவரிடம் பணத்தாசை காட்டி ஏமாற்றி பத்தனம்திட்டாவிற்கு அழைத்து வந்து நள்ளிரவில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ரோஸ்லியை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து, முதலில் கொடுத்த பலி பூஜை பழிக்கவில்லை என்று மற்றொரு பெண்ணை பலி கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் முகமது. அதன்பேரில் தமிழ்நாடு, தர்மபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை தோட்ட வேலைக்கு அழைத்து, அவரையும் பலி கொடுத்தனர். இதயடுத்து பத்மாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்தனர்.

முஹம்மது ஷாஃபி

இருப்பினும் பத்மாவை கண்டுபிடிக்கவில்லை என்பதால், அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தனர். அதன்பேரில் தீவிரமாக தேடி வந்த அதிகாரிகள் கேரளாவுக்கு சென்று விசாரிக்கையில் இந்த விவகாரத்தில் முஹம்மது ஷாஃபி பிடிபட்டுள்ளார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்காக 2 பெண்களையும் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் தம்பதியினரையும் கைது செய்து விசாரித்ததில், இரண்டு பெண்களை உயிருடன் கை கால்களை கட்டி, நரபலி கொடுத்து, துண்டு துண்டாக வெட்டி பச்சையாக சாப்பிட்டால் ஆயுள் கூடும் என்று மந்திரவாதி முகமது சொன்னதாகவும், ஆனால் பச்சையாக சாப்பிட விருப்பமில்லாமல் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து இறந்த 2 பெண்களிடம் சடலங்களை அழுகிய நிலையில் மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலி மந்திரவாதி முஹம்மது ஷாஃபி, தம்பதியினர் பகவந்த் சிங் - லைலா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

பிறகு அவர்களுக்கு அக்டோபர் 26-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தண்ணீர் தொட்டியில் மூழ்கிய குழந்தை.. விளையாடிக் கொண்டிருக்கும் போது நேர்ந்த அவலம்.. சேலத்தில் சோகம் !