India
ஆர்டர் செய்ததோ ரூ.1300 மதிப்புள்ள வாட்ச்.. வந்ததோ மாட்டுச் சாணம்: Flipkart-ல் தொடரும் குளறுபடி!
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்-ல் ஆர்டர் செய்த வாட்சுக்கு பதில் மாட்டுச் சாணம் பார்சலில் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், கசெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நிலம் யாதவ். இளம் பெண்ணா இவர் தனது சகோதரர் ரவேந்திராவுக்கு வாட்ச் ஒன்றை வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து செப்.28ம் தேதி ஃப்ளிப்கார்ட்-ல் ரூ.1304 மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை ஆர்டர் செய்துள்ளார். பிறகு 9 நாட்கள் கழித்து அக்டோபர் 7ம் தேதி வாட்ச் டெலிவரியாகியுள்ளது. பின்னர் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் வாட்சுக்கு பதில் மாட்டுச் சாணத்தால் ஆன 4 வறட்டிகள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் பார்சலை டெலிவரி பாயிடம் ரிட்டன் செய்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். மேலும் இதில் பொருட்களை வாங்கலாமா? வேண்டாமா? என்ற அச்சமும் அவர்களுக்கு எழுந்துள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!