India
கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்குச் சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் என 51 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காடு - வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 41 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றுலாவந்த பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்” : மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு!
-
இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு
-
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!