India
இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் !
கர்நாடக மாநிலத்தில் கொப்பல் தாலுகாவில் ஹசகல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஏழ்மை நிலையால் கஷ்டப்பட்டு வந்துள்ளது. மேலும்,அவனது குடும்பத்துக்கு கடன் பிரச்சனையும் இருந்துள்ளது.
இந்த சிறுவனும் இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ள ஒரு கும்பல் முடிவு செய்துள்ளது. அதன் படி அந்த சிறுவனை சந்தித்த அந்த கும்பல் நிர்வாண பூஜை செய்தால் சிறுவனின் குடும்பத்திலுள்ள வறுமையும், கடன் பிரச்சினைகளும் தீரும் என்று கூறியுள்ளனர்.
மேலும், கடவுளின் அருளால் வறுமை நீங்கி அதிக பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த சிறுவன் அந்த கும்பலின் முயற்சிக்கு சம்மதித்துள்ளார். அதன்படி, அவர்கள் அந்த சிறுவனை ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு அந்த சிறுவனை நிர்வாணமாக நிற்கவைத்து பூஜை செய்துள்ளனர். அதோடு நிற்காமல் இதனை வீடீயோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்த தகவல் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த செயலில் ஈடுபட்ட ணப்பா தளவரா, சரணப்பா, விருபான கவுடா மூன்று இளைஞர்களை கைதுசெய்தனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!